Sunday, August 12, 2012

இண்டர்வியுவும் நானும் - "ABC" கம்பெனியில்

12 .30 க்கு இன்டவியு, 
                           அந்த மல்டிநஷனல் கம்பனியின் வாசலில் 12 .10 அளவில் செகுரிடியிடம் ஐடண்டியை (ஒரு மூன்று நாலு வருடங்களுக்கு முன்னர் இதுதான் தமிழர்ண்ட உயிர் கவசம்) காட்டிகொண்டு நான், அவன் நேரே ரிசப்சனுக்கு வழியக்காட்டினான், போனன்.

          "ஐ ஆம் ரகு, came for an interview", "okay give me your IC", இது அந்த லேடி, கையில விசிட்டர் காட்டை தந்து இருக்கையை காட்டினா.

              இங்க இரண்டாம் முறை வாரன் இண்டவியூவிட்கு, மல்டிநஷனல் எண்டபடியா விடமுடியல, தெரியும் எவன்டயாவது ரெக்கமேண்டஷன் தேவை வேலைக்கு, இருந்தும் ஒரு ஆசை தான், சொல்லுவினமே "Try & Try one day you can fly " எண்டு பறக்கத் தேவையில்லை நடந்தா மட்டும் போதும் எனக்கு. கடந்த முறை நடந்ததுகளை மனசு அசை போடுது.        

                                                    "Mr . ரகு we have received over 1 ,000 applications and shortlisted to 23 you are one of them" , ஏதோ வேலையே தந்திட்ட மாதிரி சொன்னாங்க எத்தனை முறை கேட்டிருப்பம் நானும் சிரிச்சுக்கொண்டே "தாங் யு சார்", அதுக்குபிறகு நடந்ததெல்லாம் வரலாறு, இப்ப இன்னுமொருக்கா இங்க வந்திருக்கிறான் இந்த முறை "Management Trainee " கொஞ்சம் பெரிய பதவி. இலங்கையில ஒரு வேலைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்ட்கள் வருகுது டிகிரி உள்ளவங்கள் கூட சாதாரண வேலைக்கு போறாங்கள், ஆனா இந்த மத்தியவங்கியோ ஒவ்வொரு மாதமும் வேலையற்றோர் வீதம் குறைஞ்சுகொண்டு வருகுதென்று கதையளகிரான்கள், நமக்கேன் பெரிய இடத்து விவகாரமெல்லாம்.

          கொஞ்சநேரத்தில ஒருத்தி நேரே ரிசப்சனுக்கு வந்து ID ஐ கொடுத்து பாஸ் எடுத்துக்கொண்டு எனக்கு முன்னால இருந்த இருக்கைல காலுக்கு மேல காலை போட்டுகொண்டு இருந்துகொண்டா, பதட்டத்தையும், கையில இருந்த பைலையும் பார்த்தா அட நீயும் என் இனமடி, ஆமாங்க இண்டவியூவிட்கு தான் வந்திருக்கிறாள். ஹ்ம்ம் நல்ல 5 அடி 8 அங்குல  உயரம் என்ன இருந்தாலும் நம்ம தமிழ் பொண்ணுங்க முகம் மாதிரி வராது பார்த்துக்கொண்டே இருக்கலாம், ஆனா மற்றதுகள்ல சிங்கள பொண்ணுங்களை அடிச்சிக்க ஏலா, சும்மா சிக்கென்று இருந்தாள் அதுவும் அந்த ட்ரெஸ்ல "மடையா யு கேம் போர் இன்டர்வியு" மேலும் வர்ணிக்க போன என்னை புத்தி தடுத்திச்சு, மனசை கட்டு படுத்திகொண்டு அங்காள இங்கால பார்த்துகொண்டு நேரத்தை கடத்தினான்.

நேரம் 12 .35....
                 யாரும் கூப்பிடேல, ரிஷப்டநிஸ்ட் மூஞ்சைய ஒருக்கா பார்த்தன், அவள் ஏதோ விளங்கினவல் போல யாருக்கோ போன் பண்ணினால் எண்ட பேரும் சொல்லிக்கேட்டுச்சு, இப்பதான் நான் இங்க இருக்கிறது அவளுக்கு தெரிஞ்சிச்சு போல.

      கொஞ்சதால ஒருத்தன் வந்து தன்னை "HR" மேனேஜர் எண்டு அறிமுகப்படுத்திகொண்டு ஒரு ரூமுக்கு கூட்டிட்டு போனான், போற வழில அந்த கம்பனில வேலை செய்யிற பாய்சும் கேள்சும் கூட்டமா தஸ்ஸு புஸ்ஸு இங்கிலிஷ்ல அரட்டை அடிச்சுக்கொண்டு நிண்டாங்க லஞ்ச் பிரேக் போல, நமக்கு ஒண்டும் விளங்கல் போட்டிருக்க ட்ரெஸ்ஸும் பேசுற ஸ்டைலும் St bridges , Ladies college , HFCல படிச்சிருப்பாங்க போல, போய்ஸ் Thomas அல்லது  Peters ஆய்  இருப்பாங்க, நம்மளுக்குதான் இவன்கள கண்டா ஆகாதே, Beckam ஸ்டைல மயிரையும் வைச்சுக்கொண்டு  செம கலஸா இருந்தாங்க, எப்படியோ நாளைல இருந்த பிரெண்ட்சாகப் போரம் இப்பவே ஒரு ஹாய் சொல்லுடா ரகு எண்டு மனசு சொல்லிச்சு வழமை போல புத்தி கேக்கல.

      "Welcome Mr ரகு": ரூமுக்குள்ள போனதுமே மூணு பேர் கொண்ட panel வரவேற்றாங்க, நானும் "Thank You Sir" எண்டு சொல்லிக்கொண்டே விசாரணைக்கு  போற தமிழ் அரசியல் கைதி போல அவங்களுக்கு முன்னால இருந்து கொண்டன்.

                      இதோ நீங்களும் வெல்லலாம் "ABC " கம்பனில வேலை எண்டு கேம் ஷோ மாதிரி கேள்வி கேட்க தொடங்கினாங்க, இந்த HR காரன்தான் முதல்ல தொடங்கினான், "Mr ரகு இந்த CV ல mention பண்ணாத உன்னை பற்றி எதாவது சொல்லு" எண்டு, நாம தானே ஸ்கூல் Exhibitionla பங்கு பற்றினது தொடங்கி  எல்லாத்தையும் போட்டு CV ய நிரப்பி இருக்கம் அதை விட சொல்றதுக்கு என்ன இருக்கு இருந்தாலும் ஒரு மாதிரி ஏதோ அடிச்சு விட்டான், இப்ப Finance டைரக்டர், "வாட் இஸ் தி ரீசன் போர் அப்ப்ல்யிங் திஸ் கம்பெனி" எண்டு தொடங்கி இருக்கிற வேலைய  ஏன் விடுறீங்க,  வேலை  செய்த ஹிஸ்ட்ரி எல்லாம் விசாரிச்சான்" நானும் "சார் திஸ் இஸ் தி multi national கம்பெனி  தட்ஸ் வை applied எண்டு பதில் சொல்லி முடிச்சன்.



               கடைசியா தொடங்கினவன் Head of Treasury , கேட்குற கேள்விகளிலேயே  தெரியுது வேற யாரையோ இடத்துக்கு  நிரப்பிடான்க  எண்டு, பின்ன முன்னாடி பார்த்த வேலைத்தளங்கள்ள  நீங்க எதாவது அட்வைஸ்  பண்ணி  முடிவையே மாத்தி இருக்கீங்களா எண்டு கேள்விய கேட்டா, எதிர்பார்த்த கேள்வி தான் ஆனா பொய் சொல்ல தோணல, அதால நிதானமா சொன்னேன் சார் "I  had no such  opportunity to do so in the past , may be this the place to show my skills " விழுந்து விழுந்து சிரிச்சாங்க, பிறகு "Thank you   Mr ரகு, we will inform you shortly" எண்டு வழி அனுப்பி வச்சாங்க, அதுக்கு பிறகு நடந்ததெல்லாம் நீங்க எதிர்பார்த்ததுதான் ம்ஹூம் ஒரு போன் காலும் வரலே.

        சந்தர்பம் கிடச்சா தானே சச்சினே, நீங்கதானே வேலையே கொடுகிறீங்க இல்ல பிறகு எப்புடி சாதிக்கிறது, "Recomendation " உம் "Favourism " உம் இலங்கயிண்ட தொழில் சந்தையில பெரிய சாபக்கேடு, யாரும் சொந்தமா பிசினஸ் செய்தாதான் நல்ல நிலைக்கு வரமுடியுமோ எண்டும் தோணுது.

டையை கழட்டி பொக்கட்டுக்குள  திணிச்சுகொண்டு  வாசலுக்கு வாறன் கூட வேலை செய்யிற நண்பனொருவன் ஹாய்டா எண்டு சொல்லி கிராஸ் ஆகிறான், எனக்கு தூக்கிவாரிபோட்டுச்சு, அப்பத்தான் காலைல ஆபிஸ் மனேஜருக்கு  போன் போட்டு "மச்சன் today i am not feeling good , so grant me a day off " எண்டு சொன்னது நினைவுக்கு வந்திச்சு...)

14 comments:

  1. நிசமான வார்த்தைகள் சார்...இந்தியா மாதிரி இலங்கையும் வந்திட்டிடுது..ரெக்கமெண்டேசன் முக்கியம்..நல்ல பதிவு,.,வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஆமா பாஸ் இந்த MNC கம்பனிகளால ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்காங்கள் நம் ஆக்கள்..) வாழ்த்துகளுக்கு நன்றி மைந்தன்..)

    ReplyDelete
  3. Good one Ragu!!!
    Hmm.. yeah they shouldnt have this in a multi national firm.
    But for a small and mediam firm, recruitment via recomendation is more suitable.. I have experienced!

    ReplyDelete
    Replies
    1. Thanks heap Vinoth anna...)
      yeah accepted may be cost effective for them..)

      Delete
  4. Not only the cost, it’s very difficult to identify the suitable candidate in an interview; since we all are faking ourselves in interview.
    Referrals works better, when person recommending knows the gravity of the work to be done as we as the candidate’s capabilities. Also the candidate will be bit reluctant to leave the job; if the work doesn’t fit his/her expectation.

    ReplyDelete
    Replies
    1. Valid point anna, arguments taken, but of course MNC shouldn't entertain referrals at all, then its unfair for potential graduates...)

      Delete
    2. Vinoth anna , im really surprised after read your comment, This is exactly same what i think to write as a comment here, i really shocked. please see my comment in FB.

      // the candidate will be bit reluctant to leave the job// this is the exact situation,
      We have lot of options.Thats the major problem, we are choosing the company and jobs,
      i heard some of the engineering firms they like to recruit NTT students, not BSC moratuwa , because NTT students have less options and expectations than moratuwa students, so there dedication and the performance for the perticular company is better than a moratuwa student.

      Delete
    3. Yeah totally agreed wit your points as well, but other graduates also should be given a chance in blue chips machan...) Thnks Mathu..)

      Delete
  5. good one da,,mre than expected//// தெரியும் எவன்டயாவது ரெக்கமேண்டஷன் தேவை வேலைக்கு, இருந்தும் ஒரு ஆசை தான் ////"Recomendation " உம் "Favourism " உம் இலங்கயிண்ட தொழில் சந்தையில பெரிய சாபக்கேடு // do u agree,,, most f da companies looking only skills nt recomendation /// போட்டிருக்க ட்ரெஸ்ஸும் பேசுற ஸ்டைலும் St bridges , Ladies college , HFCல படிச்சிருப்பாங்க போல, போய்ஸ் Thomas அல்லது Peters ஆய் இருப்பாங்க, நம்மளுக்குதான் இவன்கள கண்டா ஆகாதே, ////ena seyurathu freeya vidu avangala////

    ReplyDelete
    Replies
    1. Hmmm thanks a lot Kirupa...) as a creator i always have that anxious weather writings will reach to the audience or will they neglect it, good honest comment give satisfaction for us and the line "More than Expected" its a true delight mate....)

      Yeah i agree there are few companies looking for real talents but u know only handful of us are that 5 per centers, others also should be given a fair chance according to me...)

      Lol those school guys always had rift with us know since our school days so no worries :)

      Delete
  6. நல்ல பதிவு ரகு. நிறைய பேரை போய் சேரும் ஏனென்டா நிறைய பேருண்ட சொந்த அனுபவமா இருகிறதால...வாழ்த்துக்கள் .. தொடர்ந்தும் எழுது .. இப்ப தான் இறங்கி வந்திருக்கிறாய்.. தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஹ்ம்ம் நன்றி மது, தலைப்புகள் தேர்ந்தெடுப்பதில் தான் பதிவுகளின் சிறப்பு தங்கி இருக்கிறது...) Anyway wil try to write thnks for the supports...)

      Delete
  7. நல்ல அனுபவம் தான்.. இப்ப தானே ஆரம்பம்.. ஐ மீன் பதிவில் ;)
    கலக்குங்கோ :)
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மூத்த பதிவரின் வார்த்தைகளுக்கு நன்றி..)
      Really Humbled by ur time here Loashan Anna, tnks for da boosting compliment...)

      Delete