Friday, August 15, 2014

கர்ணன் செயல் மீது என் கேள்விக்கணை

தர்க்கம் அறிமுகம்  


மகாபாரதத்தில் கர்ணனின் பாத்திரம் அவன் கொண்ட நிலை கருதி உயர்வாக கருதப்படுகிறது, ஆனால் எனக்கொரு மாற்றுக் கருத்துண்டு.
கர்ணன் கொடை வள்ளல், தர்மவழி நின்றவன், செஞ்சோற்று கடன் தீர்த்தவன் என்பதெல்லாம் சரியானதே. எனினும் எச்சந்தர்ப்பத்தில் கர்ணன், கொவர் பக்கம் சென்றான் என்று பார்த்தால், அவன் தன் சுயநலம் காக்கவே அடைக்கலம் கொண்டானென நான் நினைக்கிறேன்.

கர்ணனும், துரியோதணும் அறிமுகமாகும் காட்சி;


துரோணரின் குருகுல வாசம் முடித்த பாண்டவரும், துரியோதநாதியரும் தம் ஆற்றலை அரசன் முன்னும், மக்கள் முன்னரும் காட்டுவதட்காக ட்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கில் வருகிறார்கள், துரியோதனன் வழமை போல சகுனி மாமனுடன் கூட்டணி கொண்டு தருமன் மற்றும் பீமனை தோல்விகொள்ளச்செய்கின்றான், இப்போது அர்சுனன் அரங்கிட்கு நுழையும் தருணம், வாயிலிலிருக்கும் கல்லாலான சிலையொன்றினை துரோரின் மகன் அஷுவத்தாமன் அம்பொன்றின் மூலம் அருச்சுனன் மீது விழ வைக்கின்றான்எதிர்பார்த்தது போலவே தன் வில்லாற்றலால் அவற்றை மீண்டெழுந்து அருச்சுனன் துரியோதனனை நோக்கி வருகின்றான். வந்தவன் துரியோதனனை நிலைகுலையவும் செய்கின்றான்அப்பொழுதான் கர்ணன் துரியோதனனை விடுவித்துக் கொண்டு அரங்கிற்குள் முதன்முறையாக பிரவேசிக்கின்றான், காட்சி இத்துடன் நிற்க;

இங்கு கர்ணனின் நிலை பற்றியும் பார்த்துவிடுவோம்; 


சிறுவயதில் வில்லாற்றல் கற்றுக்கொள்ள துரோணரிடம் சென்ற கர்ணன் அரச குலத்தைச் சேர்ந்தவன் இல்லையென்ற காரணத்தினால் அவரால் திருப்பி அனுப்பப்பட்டான், நிராகரிக்கப்பட்டவன் துரோணரின் குருவான பரசுராமரிடமே செல்கிறான், பரசுராமர் அரச குலத்தவர்களை தவிர்ந்த அனைவருக்கும் வில்லாற்றல் விளக்கிக்கொடுப்பவர், எனவே அவரும் கர்ணனுக்கு அனைத்து வித்தையினையும் கற்றுக்கொடுக்கிறார், அன்றிலிருந்து கர்ணன் கர்வம் கொள்கிறான், தாம் தான் சிறந்த வில் வித்தைக்காரன், தன்னை வெல்ல தரணியில் யாருமில்லையென்று என்ணினின்றான், அருச்சுனனின் ஆற்றலைப் பற்றி அறியவந்தவன் அவன் துரோணரின் சீடன் என்றரிந்ததும் மேலும் குரோதம் கொள்கிறான், அர்ச்சுனன் மேல் மட்டுமன்றி துரோணரும் அவன் இலக்காகின்றார், இது இவ்வாறிருக்கத்தான் கர்ணன் அஸ்தினாபு இளவரசர்களின் போட்டிக்கு வருகின்றான், இதிலொன்று தெளிவாகத் தெரிகின்றது கர்ணன் தன்னை சிறந்த வீரனாக நிரூபிக்கும் நோக்குடன் சுயநலம் கொண்டான். 


மீண்டும் காட்சி தொடர்கிறது;

அரங்குக்குள் நுழையும் கர்ணன், தலைசிறந்த வில்லாளன் அருச்சுனன் என்பதை தன்னால் ட்கமுடியாதுதன்னுடன் நேருக்கு நேர் போர் புரிய வரும்படியும் அழைப்பு விடுக்கின்றான், ஆனால் அரச குலத்தை சேர்ந்தவருடன் தான் அருச்சுனன் போரிடுவான், நீ தேரோட்டி மகன் இங்கு போரிடமுடியாது என்று குலகுரு சொல்லி மக்கள் முன் பெருத்த அவமானம் பெற வைக்கின்றார், அப்போதுதான் துரியோதனன் அங்கதேசத்தினை கர்ணனுக்கு வழங்கி அவனுக்கு அரசபதவி தாரைவார்த்து, கர்ணனை, அருச்சுனனுடன் போர் புரியும் தகுதியை வழங்குகின்றான்.   

கதையினை இத்தோடு நிறுத்தி வியாக்கியானம் பார்ப்போம்.


கர்ணன் அரங்கத்திட்கு நுழைந்த காரணம் தன் வில்லாற்றலை நிரூபிப்பதாக இருக்கலாம் (கவனிக்க இதுவும் சுயநலமே ஆகும்) ஆனால் அவன் உதவி செய்தது துரியோதனனுக்கு, இங்கு துரியோதனனின் அதர்ம செயல்களை உலகம் அறிந்தது, கர்ணன் ஆரம்பத்தில் இவன் பற்றி அறியாமல் இருக்கலாம், ஆனால் அறிந்த பின்பும் கர்ணன் துரியோதனன் நட்பை தொடர்ந்தது தர்மமாகும்.

சரி செஞ்சோற்று கடன் என்று சொல்லி இலகுவாக முடித்துவிடலாம், எனினும் அதனையும் சற்று விரிவாக பார்ப்போம்.


துரியோதனன், கர்ணனின் மானம் காத்து அரச பதவி வழங்கி தன் நண்பனாக அணைத்துக் கொண்டான், ஆனால் ஏன் அவ்வாறு செய்தான், இந்தப் புவியில் அர்ச்சுனனின் வில்லாற்றலை எதிர்த்து நின்று போராடக் கூடியவன் கர்ணன் ஒருவனே, இவன் மூலம் விஜயனை வெற்றி கொள்ளலாம் என்று வஞ்சகத் திட்டம் போட்டான், எனவே துரியோதனன், கர்ணனை பிரதியுபகாரம் கருதியே தன்னுடன் சேர்த்துக் கொண்டான் ஆகவே இது தர்மப்படி உதவியாக அமையாது, சரி உதவி என்று வைத்துக்கொண்டாலும், கர்ணன், துரியோதனனை அர்சுனனின் அம்பு கட்டுகளில் இருந்து விடுவித்து அப்பொழுதே கைமாறு செய்து விட்டான்.

இவற்றினைவிட, கர்ணன், துரியோதநாதியரின் அதர்ம செயல்களை தெரிந்து கொண்டே, அவர்களுடன் துணைகொண்டான், எனவே அவர்களின் பாபச் செயல்களில் கர்ணனுக்கும் பங்குண்டு, அதர்ம வழியினை கர்ணனும் பின்பற்றினான், பாவம் செய்தால் தன் மகனென்றும் பாரமால் தண்டனை கொடுத்து வந்த அரச குலத்தவர்கள் மத்தியில், துரியோதனன் தனக்கு அடைக்கலம் (அடைக்கலம் குடுத்தவனும், பெற்றவனும் சுயநல நோக்கோடு நடந்தார்கள் என்பதை கவனிக்ககொடுத்தான் என்ற ஒரு காரணத்திற்காக அவனுடன் நின்ற செயலை செஞ்ச்சோற்று கடனென்று ஏற்றுக்கொண்டு கர்ணனின் செயல்களுக்கு அர்த்தம் கற்பிக்க இயலாது.  

நிறைவாக என் கருத்து;


வேத தர்மங்களை கற்றுணர்ந்த கர்ணன் இறுதிவரை அருச்சுனன் மீது வஞ்சம்தீர்க்கவே துரியோதனனுடன் நின்றான் என்பதே எனது கருத்து. ஆனால் அவன் சிறந்த வில்லாளி, கொடையாளி, கருணை மிக்கவன் என்பதில் துளியும் ஐயம் கிடையாது.


பட உதவி :- மகாபாரத தொடர் ஸ்டார் தொலைக்காட்சி.