Friday, June 17, 2011

ஆன்மீகம்

ஆன்மீகம்

எந்த ஒரு பொய்யான கொள்கைகளும், தகவல்களும் நூறாண்டுகளாக, ஆயிரமாண்டுகளாக, ஆயிரமாயிரமாண்டுகளாக பின்பற்றபட்டோ, தொடர்ந்து கொண்டிருக்கவோ மாட்டாது, ஹிட்லரின் யூத எதிர்ப்புக்கொள்கை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மட்டுப்பட்டது போல, கடாபியின் இராணுவக் கொள்கை சர்வதேசத்தால் கிழித்தெறியபட்டுகொண்டிருபது போல, ஏன் அண்மையில் ஊழல் சாம்ராஜ்யத்தின் கோட்டை தமிழர்களின் தலையெழுத்தை தீர்மானிக்கமுடியாத அதிகாரத்தில் இருந்த கோழை கலைஞரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது போல, இன்னும் அருகாமையில் சொல்வதென்றால் எமது தேசத்தின் கோவின் மகுடம் பல அம்புகளினால் குறிபார்க்கபட்டுகொண்டிருப்பது போல, எந்த ஒரு பிழையான கொள்கைகளும் நீண்ட காலதிட்கு சமூகத்தினால் ஏற்றுகொள்ளவும், பின்பற்றிகொண்டிருக்கவும் மாட்டாது, அவ்வாறு காலதி காலமாக பின்பற்றபட்டுகொண்டிருப்பது என்றும் பிழையானதாகவோ, பொய்மையாகவோ இருக்காதென்பதே எனது வாதத்தின் தொனிப்பொருள்.

இலங்கையில் அண்மைகாலமாக எம்மவர்களின் இளஞ்சமுதாயத்தினர் மத்தியில் ஆன்மிகத்தை பற்றியும், கடவுட் கொள்கைகள் பற்றியும் ஒரு தெளிவின்மை இருந்து கொண்டேயிருகின்றது (
மற்றயவர்கள் ஆன்மீகத்தில் காட்டும் நாட்டம் வியக்கவைக்கிறது, இன்னும் ஒரு படி மேலே போய் எமது ஆலயங்களில் எம்மைவிட அவர்களே கூட இருக்கிறார்கள், வருகிறார்கள், ஆம் யாருமற்ற இடங்களை அரசாங்கம் பட்டா போடுவது இயற்கை தானே, என்னை மிகவும் பாதித்த இன்னுமொன்று யாழ் நல்லூர் பிரசித்தி வாய்ந்த கோவிலில் அவர்களே அதிகளவில் திரிகிறார்கள், கலாசாரமற்ற உடைகளிலும் அங்கு உலாவுகிறார்கள், தகுந்த உடட்சுத்தமுடந்தான் வருகிறார்கள் என்றால் அதுவும் கேள்விக்குறிதான், ஏன் அங்கு வாயில் காப்பாளர்களே இரு சி சிப்பாய்கள் தான், இவற்றிட்கெல்லாம் காலமும், நடந்தேறிய விடயங்களும்  தான் காரணம் என்றாலும், எம்மவர்கள் மத்தியில் தொன்று தொட்டு இருந்து வந்த வழிபாடுகள், கலாசாரங்கள் பிறழ்ந்து விட்டன என்பதும் கசப்பான ஒரு உண்மையே) அதுவும் அண்மைக் காலங்களாக மேடையேற்றபடும் பல ஆனந்தாக்களின் ஆனந்ததாண்டவங்களும் இவர்கள் மனதை மேலும் குழப்பியிருக்க வேண்டும், ஆனால் குழப்பிய குட்டையில் தான் இலகுவாக மீன் பிடிக்க முடியும் நண்பர்களே  ஆகவே தூண்டில்களுடன் காத்திருக்கும் கடவுள் எதிர்ப்பாளர்களை இனம் கண்டுகொள்ளுங்கள்.

பல விடயங்களை நம்பிக்கை என்ற உதவியுடன் தான் கடக்க வேண்டியுள்ளது, நாளை விடியும் என்பதும் நம்பிக்கை, பிராண வாயு தொடர்ந்து கிடைக்கும் (
அதுவும் இலவசமாக , இதற்கும் கட்டணம் என்றால் ???) என்பதும் நம்பிக்கை, காய்கறிகள் விளையும் என்பதும் நம்பிக்கை, மழை பொழியும் என்பதும் நம்பிக்கை ஏன் வாழ்கையில் ஒவ்வொரு செயட்பாடுகளையும் உற்று நோக்கினீர்களாயின் நம்பிகையுடன் நாம் எவ்வாறு பின்னிப் போயுள்ளோம் என்று தெரிய வரும், அதே போல்தான் ஆன்மிகம், கடவுட்கொள்கை, ஆத்திகம் இவையும் ஒரு வகை நம்பிக்கை, இந்த அண்ட சராசரங்களையும், உலகத்தையும், அதிலுள்ள உயிர்களையும் படைத்திட்ட, ஆட்டிவைக்கின்ற அந்த பெயரற்ற, ஊரற்ற, குணம், குறியற்ற, கண்ணால் காணமுடியாத சக்தியை நாம் இறை என்கிறோம் அதை வழிபடுகிறோம்.

அதற்கு ஒரு உருவம் கொடுக்க விரும்பி சிலை, உருவ வழிபாடுகளை தோற்றுவித்தோம், இவற்றினை எம் வாழ்கையில் ஒரு அங்கமாக கருதி விழாக்கள், பண்டிகைகள், பூஜைகள், அபிசேகங்களை உருவாக்கி செய்தும் வந்தோம், இதனை உணர்ந்து அறிவுபூர்வமாக பின்பற்றியவர்கள் இதன் பயன்களால் கவரப்பெற மீண்டும் மீண்டும் எம்மிடம் வந்தார்கள் நாம் வளர்ந்தோம், எங்கும், எதிலும் இருக்கும் எதிர் மறை எண்ணம் கொண்டவர்கள் இவற்றினை சரியாக அறிந்து கொள்ளமுடியாதவர்கள் எம்மைவிட்டு பிரிந்து தமக்கு நாத்திகன் என்று பெயர் சூடிக்கொண்டார்கள்.


ஆனால் இவர்கள் தம்மை பகுத்தறிவாளன் என்ற பதம் பிரயோகித்து தர்க்கம் புரிய விளையும் போது தான் பல விடயங்களை ஆராய வேண்டிய நிலை வருகிறது, உண்மை என்னவென்றால் இவர்களில் பல பேருக்கு பகுத்தறிவாளன் என்றால் என்ன என்பதன் அர்த்தம் தெரியாது, கட்சி கொடி ஏற்றினால் தேசிய கொடி என்று திரியும் கூட்டம், உண்மையான பகுத்து அறிபவன் இந்த உலகத்தின் கர்த்தா யார், மூலம் எது என்ற தேடலில் இன்னும் இருக்கிறானே ஒழிய கடவுள் எதிர்ப்பு கோஷ்டியினரில் இருக்க மாட்டான் என்று என்னால் ஆணித்தரமாக கூறமுடியும்.


இந்த உலகத்தில் எத்தனை வீதமான வன்செயல்கள், மதம், நெறி, சமயம் என்ற கட்டுகோப்புகளில் இருக்கும் உண்மையான ஆன்மிக வாதியினால் நிகழ்த்தபடுவதில்லை, இந்த முறைமைகள், சமயங்கள் என்ற ஒன்று இல்லாவிட்டால் அதன் விளைவுகளை யோசித்து பாருங்கள், அரசாங்கத்தினால் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு சிப்பாயினை நிறுத்தமுடியுமா?, உலகின் 90 வீதம் கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள், அந்த 10 வீதமே  இந்த வன்செயல்களுக்கு காரணம் என்று கூறவரவில்லை, ஆனால் இரு பக்கங்களும் இருக்கும் ஒரு சில கறுப்பாடுகள் இவற்றினை தூண்டிவிட்டு வேடிக்கை பார்கின்றன, உதாரணமாக சிறந்த முகாமைத்துவ கொள்கையினை ( Good Corporate Governance ) பின்பற்றிக்கொண்டிருக்கும் பல பில்லியன் ரூபாய் வணிகங்களில் ஊழல் ( Fraud ) நடப்பதில்லையா அதற்கு அந்த கொள்கைகளையா குறை கூறிக்கொண்டிருக்கிறோம் அல்லவே, அவை சரியான முறையில் பிரயோகிக்கபடாமயினாலும், பின்பற்றபடாமையினாலுமே  குற்றங்கள், தவறுகள் நடந்து கொண்டிருகின்றன, அதே போல்தான் ஆத்திகம் என்னும் பயிர்களுடன் ஒரு சில நாசகார களைகளும் வளருகின்றது, எமது இலக்கு களையாக  இருக்கவேண்டுமேயொழிய நிச்சயம் பயிர்கள் அல்ல.

எமது ஆரம்ப நிலைக் கல்விகளில் கற்றிருப்போம் வரைபடங்கள், உருவகங்கள் மூலம் கடினமான பாட விடயங்களும் இலகுவாக மனதில் பதிந்து விடும் என்று, அதே போல்தான் ஆலயங்கள் எனும் வரைபடத்திலுள்ள சிலை வழிபாடு எனும் உருவகங்கள், இவை மக்களை சரியான பாதையில் வழி நடத்தி செல்வதற்கும், சரியான ஆன்மிக நெறியினை போதிப்பதற்கும் சிறந்த, உண்மையான ஆன்மிக கல்லூரிகளில் பட்டம் பெற்ற போலியற்ற ஆசிரியர்களால் ஆன்மிக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு பாட நெறி.


அண்மையில் ஒரு பதிவு வாசிக்க நேர்ந்தது எனது அபிமானம் மிக்க அண்ணா ஒராள் எழுதியிருந்தார், ஆலயங்களில் தொழில் புரியும் நபர்களின் வேலை அல்லது வெளியீடு நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கு (GDP ) பங்களிபதில்லை என்று, அவர் எந்த அர்த்தத்தில் சொன்னாரோ தெரியவில்லை ஆனால் எனது கருத்து இவை மறைமுகமாக நிச்சயமாக நாட்டு மக்களுக்கும் இறுதியில் நாட்டிற்கும் பங்களிக்கும் என்று, உதாரணமாக வீடுகளில் வேலை செய்யும் இல்லத்தரசிகளின் சேவைகளும் கூட G .D .P இற்கு பங்களிபதில்லை, ஆனால் அவர்கள் தங்கள் கடமைகளை சரிவரச் செய்யும்  பட்சத்தில் இல்லத்தலைவனால் சிரமமின்றி தனது கவனத்தை தொழில் மேல் வைத்து தன்னுடைய பங்களிப்பை நாட்டிற்கு வினைத்திறனான வகையில் செய்ய முடியும், அதேபோல் அங்கு வளரும் இளம் சமுதாயம் குழப்பங்கள், சிரமங்கள் இன்றி சிறந்த முறையில் பள்ளி, கல்லூரி படிப்புக்களை முடித்து தாங்களும் தங்களுடைய பங்களிப்பை நாட்டிற்கு வழங்குவார்கள், இவற்றிட்கெல்லாம் மறைமுக பங்களிப்பு இல்லத்தரசிகள் தான் என்றால் மறுக்க முடியாதல்லவா, அதே போல்தான் ஆலயங்களில் தொழில் புரியும் வர்கத்தினரும்.


ஆகவே நண்பர்களே எந்த பொய்யும், பிழையான வாதங்களும் காலம் கடந்து தொடர்வதில்லை என்ற எனது முதற் பந்தி வாதத்தின் அடிப்படையில் ஆன்மிகம் நூற்றிற்கு நூறு உண்மையானதே, இந்த குளத்தில் நீங்களும் வந்து ஆராய்ச்சி செய்யுங்கள், எமது நன்மைகளில் கலந்து கொள்ளுங்கள், தூரே நின்று குப்பைகளை வீசாதீர்கள் என்று கேட்டுக்கொண்டு இன்னும் எழுத நிறைய உண்டு எனினும் கிடைக்கும் பின்னூட்டல்களின் அடிப்படையில் தொடர்ந்து எழுதலாம் என்று இருக்கிறேன்.


 டிஸ்கி ( Disclaimer) :- இவை ஆன்மிகத்தை பற்றி தெளிவில்லாத மன நிலையுள்ளோரை குறி வைத்து அவர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் எனக்கு தெரிந்தவை கொண்டு எழுதியுள்ளேன், நிச்சயமாக யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு என்றைக்கும்  இல்லை.

நன்றி
ரகு:)      


Tuesday, June 14, 2011

என்னைப் பற்றி ......

எனக்குள் ஒரு எழுத்தாளன்

அணைத்து பதிவர்களும் சொல்லும் அதே பழைய புராணம் தான், நான் சாதாரண சாமானிய மனிதர்களிலும் சாமானியன் இன்னும் சொல்லப்போனால் உங்களது பக்கத்துக்கு வீட்டு பையன் போல எண்ணிகொள்ளுங்கள் ( பக்கத்துக்கு வீட்டில் பையன் இல்லாதவர்கள் கார்த்தி அதாங்க நடிகர் கார்த்தி என்று எண்ணிகொள்ளுங்கள், பொண்ணு உள்ளவங்க, தயவு செய்து என்னை பதிவு எழுத விடுங்க).

நான் தேடி, திரட்டி வைத்திருகின்ற, தேடி திரட்ட இருக்கின்ற நான் வாழும் இச் சமுதாயதிற்க்கு எதாவது ஒரு வகையில் நன்மை விளைவிக்ககூடிய விடயங்களை எனது பதிவின் மூலம் தரலாம் என்று இருக்கின்றேன்.

ஆரம்பத்திலேயே தனக்கென்று  ஒரு பாணியை தேர்ந்தெடுத்து  அதன் பிரகாரம் செயற்பட்டால்தானே வெற்றி கிடைக்கும், அகவே இந்த எழுத்துத்துறையில் காலத்தினாலும் அழிக்கமுடியாத பதிவர் என்ற பெயரை பெறுவதற்கு ( 100 புள்ளிகளுக்கு ஆசை பட்டால்தானே 50 புள்ளிகலாவது கிடைக்கும், ஹ்ம் C .I .M .A படிப்பவர்களுக்கு தெரிந்திருக்கும், இருங்கங்க மற்றவர்கள் அவர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்க ) எனக்கென்று தனித்துவ பாதையை தேடிகொள்வது அவசியமாகிறது.

எனவே எவ்வாறான ஆக்கங்களை கொடுக்கலாம் என்று அலுவலகத்தில் இருந்து விட்டத்தை பார்த்து சிந்திக்கும்போது ( ஆமாங்க ஆபிசில் இதான் வேலையே) தோன்றியது தான், நாம் இருக்கும் துறை சார்ந்த ஆக்கங்களையும் ( வணிகம், நிதி, முதலீடு சம்பந்தமான), நேரம் கிடைக்கும் போது ( தொலைகாட்சி, முகப்புத்தகத்தில் இருக்கும் நேரம் தவிர்ந்த) வாசிக்கின்ற நூல்களின் விமர்சங்களையும், கருத்துகளையும், இதெல்லாம் விட இன்றைய காலகட்டத்தில் அதிகமாக சர்ச்சையில் அடிபடும், இளையோர்களின் மத்தியில் ஒரு வித குழப்பத்தையும் உண்டுபண்ணியுள்ள, விஞ்ஞானத்தினாலும் இன்றுவரை தர்க்கம் கூறமுடியாத ஆன்மிகத்தை பற்றியும் எனக்கு தெரிந்தவரையில் பதிவாக இடலாம் என்று எண்ணிஉள்ளேன் 

எனது பதிவுகள் பல சமயங்களில் மிகவும் விலாவாரியாக இருக்கலாம் மற்றும் பேராசிரியர்களான திரு கூகிள், திரு விகிபீடியா போன்றோர்களிடமிருந்து இலகுவாக பெற்று கொள்ளகூடியதாக இருக்கலாம் ( இவர்களது மாணக்கர்கள் என்னிடமிருந்து அறியக்கூடியது நிச்சயமாக ஒன்றுமில்லை) ஆனால் அணைகட்டிலிருக்கும் நீரை குழாய் போட்டு எமது தேவைகளுக்கேட்ப வீடுகளுக்கு விநியோக்கிகும் வடிகாலமைப்பு சபையின் வேலையை செய்யலாம் என்ற ஒரு உயரிய சேவை நோக்கம், அதாவது நான் சார்ந்துள்ள பல இன்னல்களை சந்தித்த, சந்தித்துகொண்டிருக்கும் சமுதயாதிட்க்கு வணிக உலகில் நடைபெற்று கொண்டிருக்கும் அசைவுகளையும், படித்து பயன் பெற வேண்டிய நூல்களின் முக்கியத்துவம் பற்றியும் சுருக்கமாக பதியலாம் என்று விரும்பியிருகின்றேன்.

வலைபதிவென்றால் மொக்கை பதிவுகள் தான் எழுதவேண்டும் என்றல்லவே, கமர்சியல் படங்கள் வெற்றியளிகின்ற காலங்களில் தானே கலை படங்களும், யதார்த்தகதைப் படங்களும் வெற்றிகளைக் கொண்டாடுகின்றது, வெற்றி எனது இலட்சியமல்ல ஆனால் நிச்சயமாக தோல்வியடயபோவதுமில்லை, எனது கருத்துக்கள் அல்லது தகவல்கள் ஒரு தனிநபரின் வெற்றிக்கு அணிளளவு பங்களிப்பு செய்திருந்தால் போதும் மகிழ்ச்சியுடன் முன்னேறுவேன்.

அறிமுகமே அளப்பரையாக ( சரியான அர்த்தம் என்ன? ) இருகின்றதே என்று உங்கள் மைன்ட் வாய்ஸ் கதறுவது கேட்கிறது, காலமும் அனுபவமும் எனது எழுத்துக்களுக்கு புடம் போடும் பட்சத்தில் நிச்சயமாக என்னால் சமூகத்திற்கு நல்லது செய்ய முடியும் என்ற நம்பிகையுடன் வலையுலகத்தினுள் களம் புகுகின்றேன் ( Dear Bloggers!! Here i come ).


Saturday, June 11, 2011

TATA NANO இன் இலங்கை வருகையும், புதிய தொழில் முயற்சியும்

"நானோ" நான்கு சக்கர வண்டி ஒரு சிறிய அறிமுகம்

TATA நிறுவனத்தின் நூறாண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றில் பல மாற்றங்களையும், புதிய முயற்ட்சிகளையும் புகுத்தியவர் என்ற வகையிலும், இவற்றிக்கும் மேலாக பழமை வாதத்தில் ஊறிப்போயிருந்த நிறுவனத்திற்கு புதிய தொழில்நுட்ப உத்திகளை பாய்ச்சியவர் என்ற வகையில் காலதினாலும் போற்றபடபோகின்ற  திரு ரத்தன் டாடா என்பவர் மூலமாக முழு உலகதிட்குமே ( இப்போது இந்தியாவிலும், சில ஐரோப்பிய நாடுகளிலும், அண்மையில் இலங்கையிலும் கிடைகிறது) கிடைத்திட்ட ஒரு கனவுக் காரே ( உலகின் மிக விலை குறைந்த என்ற அடிபடையில் ) இந்த TATA நானோ.

இந்தியாவின் நடுத்தர வர்க்க அல்லது கீழ் நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கை முறையும் அவர்களது போக்குவரத்து ஏதுகைகளையுமே அவதானித்து இக் கார் உருவாக்கப்பட்டதாக கூறுகிறார் திரு டாடா, அதாவது இம் மக்கள் இருசக்கர வண்டிகளில் போக்குவரத்தின் பொது எதிர்நோக்கும் அசௌகரியங்கள், மற்றும் மழைகாலங்களில் தடைபடும் பயணங்கள், அதுபோக இவற்றினால் ஏற்படும் வீதி விபத்துகளின் எண்ணிக்கைகள் இன்னும் பல சிரமங்களில் இருந்து விடுபட ஒரு எண்ணக்கருவினை உருவாட்கி அதட்கு செயற்திட்டம் கொடுக்க விரும்பினார்.

அதாவது ஒரு நான்கு சக்கர வண்டி அமைக்கவேண்டும், அது இந்தியாவிலேயே மிகக் குறைந்த விலையுடயதாய் இருக்க வேண்டும், இவற்றையும் தாண்டி TATA குழுமத்திற்கு இதனால் இலாபம் பெருகவேண்டும் ( சிறந்த முகாமைதுவவாதி மக்களின் தேவைகளை உய்த்தறிந்து அவற்றை நிவர்த்தி செய்யும் முகமாக தனது பொருட்கள், சேவைகளை வடிவமைத்து வழங்கி லாபம் செய்ய வேண்டும் ), இதன் அடிபடையில் ஆழ்ந்து சிந்தித்து தனது பட்டறையிலுருந்து வெளிவரும் கார் இந்திய ரூபாய் 100,000 இற்கு கிடைக்குமென 2003 இல் அறிவித்து அணைத்து மீடியாக்களையும் தன் நிறுவனம் பக்கம் திருப்பினார், ஆனால் அதுவே அவருக்கு வினையாக முடிந்தது, அவர் தனது தொழிற்சாலை நிறுவுவதற்காக பெங்கால் எனபடும் இடத்தில பார்த்து வைத்திருந்த இடத்தில அவரை தொழிற்சாலை அமைக்கவிடாமல் சில அரசியல் சக்திகளினால் தூண்டிவிடப்பட்ட விவசாயிகள் கடுமையாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் இது ஒரு மாதமல்ல, இரு மாதமல்ல கிட்டத்தட்ட இரு வருட இழுபறியின் பின்னர் அவர் தனது தொழிற்சாலையை குஜராத் மாநிலத்தில் நிறுவி 2009 நடுபகுதியில்  உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த TATA நானோ காரை வாடிகையாளர்களுக்கு வழங்கினார் ஆனால் ஆரம்பத்தில் குறிபிட்ட ரூபாய் 100,000  இற்கு அல்ல, ஆனால் ரூபாய் 142,000 இற்கே வழங்கமுடிந்தது காரணம் பொருளியல் பூதம் எனப்படும் பணவீக்கம், நாங்கள் இப்பொழுதும் 2003  இன் பெறுமதியின் அடிப்படயிலா பொருட்களை கொள்வனவு செய்கிறோம்
அல்லவே, இதுவே மேற்குறிபிட்ட "டாட்டா" விட்கும் நடந்தது , இருப்பினும் அவரது அடிப்படை கொள்கையில் சிறிது பிரழ்வுமின்றி அவரது காரே இன்றளவும் உலகின் மிக விலை குறைந்த காராக வெற்றி நடை போடுகிறது, மக்களின் வரவேற்பும் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருந்தது, உதாரணமாக கார் தயாரிப்பில் இருக்கும் போதே கோரபட்ட 
1,000  விண்ணபங்களுக்கு வந்து சேர்ந்த 100,000 இற்கும் அதிகமான விண்ணப்பங்கள் இதற்கு சான்றாகும்.

எப்படி சாத்தியம் ...



நநோவுடன் திரு டாட்டா 
 
அவரால் எவ்வாறு மேற்தட்டுவாசிகளுக்கே உரியதாயிருந்த புதிய கார் என்னும் வரபிரசாதத்தை கீழ்தட்டு வாசிகளுக்கும் வழங்கமுடிந்தது, அதற்கு அவர் கையில் எடுத்த உத்தி உலகத்தில் அசுர வேகத்தில் முன்னேறி வரும் நானோ தொழில்நுட்பம் ( Nano Tech ), நானோ என்பது ஒரு மீற்றரை ஒரு பில்லியனால் வகுத்து அதில் வரும் ஒரு அலகு, மனிதனின் தலைமுடியின் தடிப்பு கிட்டத்தட்ட 60 - 70  நானோ மீட்டர்களாகும், இதன் பயன் என்னவென்றால் பெரிய உலோகங்களை  பயன்படுத்தி செயப்படும் வாகன மேற்பரப்பை இந்த நானோவை பயன்படுத்தி மிகவும் பாரம் குறைந்ததாக செய்யமுடியும், அதேபோல் அவர் பயன்படுத்திய இன்னொரு மந்திரம் தேவையற்ற செலவுகளை குறைப்பது ( "Cost Cutting ") அதாவது இரு கண்ணாடி துடைபான்களுக்கு பதிலாக ஒன்றை பொருத்தியது, குளிரூடிக்கலோ, வானொலி, இறுவட்டு இயக்கிகளை தவிர்ப்பது இதுபோன்ற பல இன்னோரன்ன செலவுகளை குறைத்து உலகமே மூக்கில் விரல் வைக்கும் வண்ணம் ஒரு காரினை தயாரித்து களத்தில் இறக்கி இருகின்றார் மனிதர்.

இன்றைய தேதியில் TATA நிறுவனம் தனது நானோ காரினை கீழே காட்டபட்டுள்ள மூன்று வகையராகளில் வழங்குகின்றது,
1 ) சாதாரணம் (Basic )      -    RS . 142 ,000 
2 ) அரைச்சொகுசு ( Deluxe ) - Rs . 171 ,000  ( AC )
3 ) சொகுசு ( Luxury ) - Rs . 195 ,000  ( AC & Power shutters )

இலங்கையிலும் நானோ

டாட்டா நிறுவனம் தனது சந்தை ஆளுகையை விஸ்தரிக்கும் பொருட்டு தனது அதிகாரம் பெற்ற ஒரே முகவர் "DIMO" நிறுவனத்தின் மூலமாக இரு கிழமைகளுக்கு முன்னர் டாட்டா நானோ காரினை இலங்கைச் சந்தையிலும் அறிமுகம் செய்து வைத்தது.

ஆனால் இம்முறை அதனால் "மிக விலை குறைந்த கார் " என்ற சந்தை படுத்தல் மந்திரத்தை உபயோகபடுத்த முடியவில்லை, காரணம் எமது அரசாங்கம் கார் இறக்குமதிகளின் மீது காட்டும் அபார அக்கறை, ஆம் இலங்கையில் ஒரு புதிய நானோ காரின் விலை Rs 1 . 1 Mn ( 1 1 இலட்ச ரூபாய் ), இலங்கையில் பொருத்தப்படும் ( Assemble ) Micro எனப்படும் காரே இங்கு குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. எனினும் அரசாங்கம் தனது கொள்கையை தளர்த்தும் பட்சத்தில் "ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு நானோ என்ற " TATA வின் கனவு இங்கும் நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

நானோ வாடகை வண்டி ( Nano Cabs )

இந்த பதிவு எழுதுவதற்கு தூண்டு கோலே இந்த புதிய வியாபார முயற்ச்சி தான், பத்திரிகையில் இதனை பற்றிய ஒரு செய்தியை வாசித்தவுடனேயே எனக்கு இந்த வியாபார எண்ணக்கரு மிகவும் பிடிந்திருந்தது.

இந்தியாவில் நானோ கார்களை பாவித்து இவ்வாறான சேவை நடைபெறுவதாக தெரியவில்லை, ஆனால் இலங்கையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ( Nano Cabs ( Pvt ) Ltd ) கடந்த 9 ஆந் திகதியிலுருந்து இலங்கை பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கவுள்ளது, அவர்களின் இந்த வியாபர முயற்ச்சியில் ஒரு துறை சார்ந்த நேர்த்தி ( Professionalism ) இருப்பதுடன் பல புதிய பெறுமதி சேர் (value added ) கூறுகளையும் சேர்த்திருப்பது கூடுதல் சிறப்பு.

கீழே இணைக்கபட்டுள்ள படத்தில் உள்ள வாசகங்களை கவனியுங்கள்,
1) Affordable metered raw
2) Vehicle tracking service
3) GPS Navigation
4) Credit card payment facility
5) Professional drivers
6) Passengers insured
போக்குவரத்துக்கு அமைச்சர் கார்களை பார்வையிடல் 
 
இதனை பற்றி இந் நிறுவன நிர்வாக இயக்குனர் "அனுஷா தர்மதாச" கூறியதாவது, முதன் முறையாக இலங்கைக்கு வரவழைக்கப்பட்ட நானோ கார்களில் மஞ்சள் நிறமுடைய அணைத்து கார்களையும் தாமே கொள்வனவு செய்ததாகவும் எண்ணிக்கையில் 24 ஆக இருக்கின்ற கார்கள் இந்த வருட இறுதிக்குள் 200 ஐ தொடுமெனவும் கூறியுள்ளார், இதை பற்றி மேலும் தெரிய வருவதாவது ஒவ்வொரு கார்களிலும் மீட்டர் மற்றும் செய்மதி தொலைதொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு உள்ளமையினால் கொள்விலைட்கு மேலதிமாக ரூபாய் 200 , 000 செலவு செய்யப்பட்டுள்ளது, இந்த வியாபரத்தின் மொத்த முதலீடு ரூபாய் 200 மில்லியன்கள்.

இலங்கை சந்தைக்கு,

என்னை பொறுத்தவரையில் இது ஒரு வரவேற்கத்தக்க தொழில் முயற்சி காரணம், இங்குள்ள முச்சக்கரவண்டி சாரதிகள் தங்களது பேரம் பேசும் ஆற்றலை கூட்டி வைத்துள்ளமையும், பிற வாடகை வண்டிகளின் கட்டணங்கள் சாதாரண பயணிகளுக்கு கட்டுப்படி ஆகாத காரணத்தினாலும், இவ்வாறான ஒரு சேவைக்கு இங்கு எப்பவும் ஒரு வெற்றிடம் இருந்து வந்தது உண்மையே, அண்மையில் நடந்தேறிய தனியார் பேரூந்து செலுத்துவோர்களின்  தொழிற்சங்க போராட்டம் மக்களிடையே மாற்றீட்டு போக்குவரத்துக்கான ஒரு நினைப்பையும் ஏற்படுத்தியுள்ளது இந்த முயற்சிக்கு பலம் சேர்க்கிறது.
ஆனால் எமது கண்களில் அண்மைக்காலமாக பட்டுவந்த "Budget taxi " என்ற பதாகையுடன் திரியும் முச்சகர வண்டிகள் இதற்கு ஒரு அளவில் போட்டியாக விளங்கும் என்று நினைத்தாலும், இந்தளவு முதலீட்டுடனும் நேர்த்தியுடனும் தொடங்கும் வியாபார முயற்சி நீண்ட தூரம் வெற்றியுடன் செல்லும் என்பதே எனது எதிர்பார்ப்பு.


Charges
1st 5 KM's
- Rs. 50 /= , thereafter every additional KM's Rs 30 /= , another appreciable induction is free accident insurance cover for passengers up to Rs.250,000/=  ( Very important aspect in colombo roads isnt?)

This cabs can be contacted via Tp 2 676767 ( People!! i never being paid for this canvas, done purely for social service purpose & to build up my CSR Lol)

இந்த பதிவை பார்வையிடும் நண்பர் கூட்டம் தயவு கூறி தங்களது விமர்சனங்களையும், கருத்துகளையும் இட்டு செல்லுமாறு கேட்டுகொள்கிறேன், எனது முதற் பதிவின் பின்னூட்டல்களே அடுத்த பதிவினை நோக்கி முன்னே செல்ல உதவும் என்று அபிப்பிராயபடுகின்றேன்.

என்றும் நன்றியுடன்,
ரகு....