Tuesday, June 14, 2011

என்னைப் பற்றி ......

எனக்குள் ஒரு எழுத்தாளன்

அணைத்து பதிவர்களும் சொல்லும் அதே பழைய புராணம் தான், நான் சாதாரண சாமானிய மனிதர்களிலும் சாமானியன் இன்னும் சொல்லப்போனால் உங்களது பக்கத்துக்கு வீட்டு பையன் போல எண்ணிகொள்ளுங்கள் ( பக்கத்துக்கு வீட்டில் பையன் இல்லாதவர்கள் கார்த்தி அதாங்க நடிகர் கார்த்தி என்று எண்ணிகொள்ளுங்கள், பொண்ணு உள்ளவங்க, தயவு செய்து என்னை பதிவு எழுத விடுங்க).

நான் தேடி, திரட்டி வைத்திருகின்ற, தேடி திரட்ட இருக்கின்ற நான் வாழும் இச் சமுதாயதிற்க்கு எதாவது ஒரு வகையில் நன்மை விளைவிக்ககூடிய விடயங்களை எனது பதிவின் மூலம் தரலாம் என்று இருக்கின்றேன்.

ஆரம்பத்திலேயே தனக்கென்று  ஒரு பாணியை தேர்ந்தெடுத்து  அதன் பிரகாரம் செயற்பட்டால்தானே வெற்றி கிடைக்கும், அகவே இந்த எழுத்துத்துறையில் காலத்தினாலும் அழிக்கமுடியாத பதிவர் என்ற பெயரை பெறுவதற்கு ( 100 புள்ளிகளுக்கு ஆசை பட்டால்தானே 50 புள்ளிகலாவது கிடைக்கும், ஹ்ம் C .I .M .A படிப்பவர்களுக்கு தெரிந்திருக்கும், இருங்கங்க மற்றவர்கள் அவர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்க ) எனக்கென்று தனித்துவ பாதையை தேடிகொள்வது அவசியமாகிறது.

எனவே எவ்வாறான ஆக்கங்களை கொடுக்கலாம் என்று அலுவலகத்தில் இருந்து விட்டத்தை பார்த்து சிந்திக்கும்போது ( ஆமாங்க ஆபிசில் இதான் வேலையே) தோன்றியது தான், நாம் இருக்கும் துறை சார்ந்த ஆக்கங்களையும் ( வணிகம், நிதி, முதலீடு சம்பந்தமான), நேரம் கிடைக்கும் போது ( தொலைகாட்சி, முகப்புத்தகத்தில் இருக்கும் நேரம் தவிர்ந்த) வாசிக்கின்ற நூல்களின் விமர்சங்களையும், கருத்துகளையும், இதெல்லாம் விட இன்றைய காலகட்டத்தில் அதிகமாக சர்ச்சையில் அடிபடும், இளையோர்களின் மத்தியில் ஒரு வித குழப்பத்தையும் உண்டுபண்ணியுள்ள, விஞ்ஞானத்தினாலும் இன்றுவரை தர்க்கம் கூறமுடியாத ஆன்மிகத்தை பற்றியும் எனக்கு தெரிந்தவரையில் பதிவாக இடலாம் என்று எண்ணிஉள்ளேன் 

எனது பதிவுகள் பல சமயங்களில் மிகவும் விலாவாரியாக இருக்கலாம் மற்றும் பேராசிரியர்களான திரு கூகிள், திரு விகிபீடியா போன்றோர்களிடமிருந்து இலகுவாக பெற்று கொள்ளகூடியதாக இருக்கலாம் ( இவர்களது மாணக்கர்கள் என்னிடமிருந்து அறியக்கூடியது நிச்சயமாக ஒன்றுமில்லை) ஆனால் அணைகட்டிலிருக்கும் நீரை குழாய் போட்டு எமது தேவைகளுக்கேட்ப வீடுகளுக்கு விநியோக்கிகும் வடிகாலமைப்பு சபையின் வேலையை செய்யலாம் என்ற ஒரு உயரிய சேவை நோக்கம், அதாவது நான் சார்ந்துள்ள பல இன்னல்களை சந்தித்த, சந்தித்துகொண்டிருக்கும் சமுதயாதிட்க்கு வணிக உலகில் நடைபெற்று கொண்டிருக்கும் அசைவுகளையும், படித்து பயன் பெற வேண்டிய நூல்களின் முக்கியத்துவம் பற்றியும் சுருக்கமாக பதியலாம் என்று விரும்பியிருகின்றேன்.

வலைபதிவென்றால் மொக்கை பதிவுகள் தான் எழுதவேண்டும் என்றல்லவே, கமர்சியல் படங்கள் வெற்றியளிகின்ற காலங்களில் தானே கலை படங்களும், யதார்த்தகதைப் படங்களும் வெற்றிகளைக் கொண்டாடுகின்றது, வெற்றி எனது இலட்சியமல்ல ஆனால் நிச்சயமாக தோல்வியடயபோவதுமில்லை, எனது கருத்துக்கள் அல்லது தகவல்கள் ஒரு தனிநபரின் வெற்றிக்கு அணிளளவு பங்களிப்பு செய்திருந்தால் போதும் மகிழ்ச்சியுடன் முன்னேறுவேன்.

அறிமுகமே அளப்பரையாக ( சரியான அர்த்தம் என்ன? ) இருகின்றதே என்று உங்கள் மைன்ட் வாய்ஸ் கதறுவது கேட்கிறது, காலமும் அனுபவமும் எனது எழுத்துக்களுக்கு புடம் போடும் பட்சத்தில் நிச்சயமாக என்னால் சமூகத்திற்கு நல்லது செய்ய முடியும் என்ற நம்பிகையுடன் வலையுலகத்தினுள் களம் புகுகின்றேன் ( Dear Bloggers!! Here i come ).


2 comments:

  1. நல்ல முயற்சி... உங்கள் சிந்தனை வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி....)

      Delete